வீட்டிலேயே கடாய் பனீர்! Home style kadaai paneer.
தேவையான பொருட்கள்:
- 1. பனீர் – 200g துண்டுகளாக நறுக்கியது.

- 2. வெங்காயம் – 2. இதில் ஒன்றை fine chop செய்து வைக்கவும். அடுத்த ஒன்றை பெரிய துண்டுகளாக dice செய்து வைக்கவும்.
- 3. தக்காளி – 3 அல்லது 4. (Finely chopped).
- 4. குடை மிளகாய் – 1 (diced) பச்சை, மஞ்சள், சிவப்பு என எல்லா நிறங்களிலும் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.
- 5. பச்சை மிளகாய் – 1 finely chopped.
- 6. காய்ந்த மிளகாய் – 6 ( இரண்டாக உடைத்து வைக்கவும்).
- 7. கடாய் மசாலா – 2 டேபிள்ஸ்பூன்.

- 8. ஒயிட் கிரேவி – 3 டேபிள்ஸ்பூன்.
- 9. எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.
- 10. கெட்டித் தயிர் – 2.5 டேபிள்ஸ்பூன்.
- 11. உப்பு – தேவையான அளவு.
- 12. மிளகாய்ப் பொடி – 1/2 டீஸ்பூன்.
- 13. மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்.
- 14. கசூரி மேத்தி / காய்ந்த வெந்தயக் கீரை – 2 சிட்டிகை.
- 15. சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்.
- 16. கொத்தமல்லித் தழை – 1 கைப்பிடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 17. இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன் finely chopped.
- 18. பூண்டு – 1 டேபிள்ஸ்பூன் finely chopped.
ஒயிட் கிரேவி செய்முறை:
ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி, அதனுடன் 10 முந்திரி சேர்த்து 1 தம்ளர் தண்ணீரில் நன்கு வேகவைத்து எடுத்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
கடாய் மசாலா:
வெறும் கடாயில் மிதமான சூட்டில் சம அளவு மிளகு, வரமல்லி வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
கடாய் பனீர் செய்முறை:
Step 1. அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் finely chopped இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் உடைத்து வைத்த வரமிளகாயில் பாதியைச் சேர்த்து வதக்கவும்.
Step 2. பொடித்து வைத்த கடாய் மசாலாவில் பாதியைச் சேர்க்கவும்.
Step 3. இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
Step 4. வெங்காயம் பொன்னிறம் ஆனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
Step 5. தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்.
Step 6. ஒயிட் கிரெவி சேர்த்து மிதமான தீயில் வதக்கி, மூடி வைத்து 2,3 நிமிடங்கள் வேக விடவும்.
Step 7. நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் குடை மிளகாயில் பாதியைச் சேர்த்து வதக்கவும்.
Step 8. பனீர் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
Step 9. தயிர் சேர்த்துக் கலந்து 3,4 நிமிடங்கள் வேக விடவும்.
Step 10. மற்றொரு சிறிய கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மீதம் உள்ள கடாய் மசாலா, வெங்காயம், குடை மிளகாய், வர மிளகாய் சேர்த்து டாஸ் செய்து,
Step 11. பனீர் கலவையில் சேர்த்து கிளறி விடவும்.
Step 12. சீரகப் பொடி மற்றும் கசூரி மேத்தி சேர்க்கவும்.
Step 13. மல்லித் தழை தூவி இறக்கவும்.
Points to note:
- A. பனீர் ஏற்கனவே சமைக்கப் பொருள் என்பதால் 5 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்க வேண்டாம். அப்படி செய்தால் ரப்பர் போன்று ஆகி விடும்.
- B. தயிர் சேர்க்கும் ஸ்டெப் பை ஸ்கிப் செய்து விட்டு இறுதியில் 1 டேபிள்ஸ்பூன் பிரஷ் கிரீம் சேர்த்துக் கொள்ளலாம்.
- C. தனியாக பாதி குடை மிளகாய், வெங்காயம், வரமிளகாய் மற்றும் கடாய் மசாலாவை எண்ணெயில் வதக்கி போடுவது – crunchy feeling காக.
